தொடர்ந்து பெய்து வரும் பலத்தமழையால் சோத்துப்பறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாக உள்ள நிலையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தேனியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் சோத்துப்பறை அணையின் நீர்மட்டம் 121.28 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் இதேபோல் மழை பெய்து கொண்டிருந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் வராகநதி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.