Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர்.

இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள செருக்கலை, மேல்சாத்தம்பூர், மேல்பட்டி, ஆரியூர்பட்டி, ராமதேவம், கூடச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றது. இதனைதொடர்ந்து பில்லூரில் உள்ள சிற்றணை நீர் நிரம்பி பாய்ந்தோடி வருகின்றது. மேலும் அதிக நீர் வரத்தால் திருமணிமுத்தாற்றில் அதிக மீன்கள் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Categories

Tech |