தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு மத்தியில் நீட் தேர்வுக்கான பயிற்சியை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளியிலேயே கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசு பள்ளிகளில் தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும், நீட்தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசு பள்ளிகளில் நடத்துவதில் எந்த குழப்பமும் ஓபிஎஸ்-க்கு தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.