Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் விற்பனை…. மேலும் 2 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொடாங்கிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்த ஒரு1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் தேனி போதைபொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கம்பம் பகுதியில் சோதனையில் நடத்திய போது கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்த உத்தமபுரத்தை சேர்ந்த பாலு என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |