இருசக்கர வாகனங்களை திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சோனைமுத்து, அஜித்குமார், சக்கரவர்த்தி உட்பட 6 பேரை தனிப்படை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.