Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… மினி லாரி டிரைவர் கைது..!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா மற்றும் காவல்துறையினர் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் உள்ள முருகன் கோவில் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் இருந்து குமுளியை நோக்கி சென்றுகொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து லாரியில் இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்த காவல்துறையினர் மினி லாரி டிரைவர் சத்ரியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த ரேஷன் அரிசிகளை உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |