Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… கண்காணிப்பில் முஸ்லிம் சங்கத்தினர்…!!

தொடர்ந்து திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் முஸ்லிம் சங்கம் சார்பில் காவலர்களை நியமித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு, போதை பொருள் விற்பனை போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து திருட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தடுக்க காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹாசனா முஸ்லிம் சங்கம் சார்பில் 6 தனியார் செக்யூரிட்டி காவலர்களை நியமித்து வாக்கி-டாக்கிகளின் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.

இதனையடுத்து கிழக்குத்தெரு ஜாமத்திற்கு சொந்தமான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களும், தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கத்தின் சார்பில் 4 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முஸ்லிம் பொதுநல சங்கம், உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |