ஆசிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சக செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சக செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.