Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் இ-பாஸ் குளறுபடிகள் – சாமானியர்களுக்கு சவாலாகிறதா ….!!!

இ_பாஸ் நடை முறையில் குளறுபடிகள் அதிகரித்து வரும் நிலையில் சாமானியர்கள் இ_பாஸ் வாங்குவதில் சவாலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

தமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ_பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் இறப்பு மற்றும் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே வழங்க கூடிய இந்த இ_பாஸ்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறப்படுகின்றன. பொதுமக்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விண்ணப்பங்கள் மீதான உண்மைத்தன்மை தரவுகளின் அடிப்படையிலேயே ஒருவருக்கு இ_பாஸ் வழங்கப்படுகிறது.

இதுவரை சென்னையில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ_பாஸ் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், 1.7 லட்சம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியை தகவல் தெரிவித்துள்ளது. பொது போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் பலரும் வெளியூர் செல்ல தனியார் டாக்ஸி அல்லது டிராவல் ஏஜென்சிகளையே அணுக வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நடைமுறை சிக்கல்களை பயன்படுத்தி பல இடங்களில் டாக்ஸி உரிமையாளர்களும், டிராவல் ஏஜென்சிகளும், இடைத்தரகர்களும் பணம் வசூலித்தும், பேக்ஏஜ் அடிப்படையிலும் அரசு ஊழியர்கள் துணையுடன் இ_பாஸ் பெற்றுக் கொடுக்கின்றனர். 5,000 ரூபாய் வரையிலும் இதற்கு பணம் வசூலித்து வருகின்றனர். சென்னை, கடலூர், வேலூர் என பல மாவட்டங்களில் இது தொடர்பான புகாரில் தொடர்புடையவர்கள் மீது சமீபத்தில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

ஒரு சில அரசு அதிகாரிகள் இடைத்தரகர்கள் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் முறைகேடு காரணமாக சாமானியர்களுக்கு இ_பாஸ் கிடைப்பது பெரும் சவாலாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பல்வேறு இடங்களில் இ_பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என வாகன ஓட்டுனர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பல வாகன ஓட்டுனர்கள். மத்திய அரசு வேண்டாம் என்று கூறிய நிலையில், பல்வேறு சிக்கல்களை கொண்ட இந்த இ_பாஸ் நடைமுறையை மாநில அரசும் ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |