Categories
தேசிய செய்திகள்

தொடரும் போர் பதற்றம்…!! உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க…!! உடனடியாக பறந்த விமானம்…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 6-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் முதல் விமானம் கடந்த 26 ஆம் தேதி ருமேனியா சென்று அங்கு சிக்கியிருந்த 216 உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது. இரண்டாவது விமானம் அதே 26ஆம் தேதி இரவு உக்ரைனில் சிக்கியிருந்த 260 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து 27 அம் தேதி 2 விமானங்கள் அடுத்தடுத்து சென்று உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்பதற்காக C-17 கிலோப்மாஸ்டர் என்ற விமானம் இன்று காலை 4 மணி அளவில் ருமேனியா புறப்பட்டு சென்றுள்ளது.

Categories

Tech |