பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவிவரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் காணொளி மூலம் அவர் உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தாவிட்டால், மேலும் குழப்பம் பரவும். அதுமட்டுமில்லாமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு எதிராக தமது அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான மானியத்தை திரும்ப பெறுவதற்காக அரசாங்கத்தை கடுமையாக சாடினார். தற்போது உள்ள அரசானது பொருளாதரத்தை கையாளும் திறனற்றது என அவர் குற்றம் சாட்டினார். மேலும் வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும் என்று எச்சரித்துள்ளார்.