புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து நேர தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, மாகே, திருப்பதி, பெங்களூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்ற கிராமங்களுக்கும் பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. புதுச்சேரி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னறிவிப்பு என்று போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் என 12 பேரை போக்குவரத்து கழக பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்றும் பணியிலிருந்து நீக்கப்பட்ட 12 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்பவேண்டும் என்றும் வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.