Categories
உலகசெய்திகள்

தொடரும் தாக்குதல்கள்…. புதுப்பெண் அகதியாக செல்லும் அவலம்…. சோகத்தில் கணவன்….!!

உக்ரேன் நாட்டை சேர்ந்த புதுப்பெண் தன் கணவனை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த 26 வயதுடைய நசர் போரோ என்பவர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கும் உக்ரைனை சேர்ந்த 21 வயதுடைய தஷா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரின் போது,  நசர் அமெரிக்காவில் இருக்க தஷா உக்ரேனில் இருந்து வேறு நாட்டிற்கு அகதியாக  செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தஷா மற்றும் அவரது தாயார் வேறு நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த நசர் தன்னுடைய மனைவி இப்பொழுது பாதுகாப்பான இடத்தில் இருப்பதால்ஆறுதல் அடைகிறார்.  மேலும் இது குறித்து நசர் கூறுகையில் “உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக  அகதிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது.  அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து பிரிந்த குடும்ப  உறுப்பினர்களை ஒன்றிணைக்க வேண்டும்.  நன்கொடைகள் மற்றும் பல சேவைகள் மூலம் உக்ரைனின் அகதிகள் நெருக்கடியை ஆதரிக்கும் முயற்சியை  மக்கள் தொடர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |