கூகுளில் பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலகம் இருக்கிறது. இங்கு பணிபுரியுந்த எமி நெய்ட்பீல்டு என்ற நபர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூகுள் அலுவலகத்தில் தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளிக்கப்படும் அதை நிறுவனம் அலட்சியப் படுத்தி விட்டது. அவருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால் வீட்டில் இருந்து வேலை பணிபுரியவும் சொன்னதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் அந்த பணியில் இருந்து வெளியேறியதாக அவர் கூறினார். இதேபோல் பல ஊழியர்கள் பாலியல் மற்றும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு தாங்கள் அனுபவித்து வரும் தொல்லைகளை கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்து நடவடிக்கைகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.