கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது.
டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று மேற்கு டென்மார்க்கில் உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம் புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இம்முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளனர். இவ்விலங்குகளை தோண்டி எடுப்பதற்கான வேலைகள் அடுத்த ஆறு மாதங்களில் நடக்க உள்ளது. இதுகுறித்து வேளாண் அமைச்சகம் கூறியதாவது, புதைக்கப்பட்ட விலங்குகளால் இதுவரை எந்த வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை மேலும் மே மாதம் வரை தோண்டும் பணிகள் நடைபெறாது என்று அறிவித்துள்ளது.