பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் போன்ற 2 முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் விற்பனையும் ஒரேநேரத்தில் துவங்கி நடந்து வருகிறது. 2 விற்பனைகளிலும் குறைந்த விலைகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகளில் ஐபோன் 14-க்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஆப்பிளின் சமீபத்திய ஸ்மார்ட் போன் சீரிஸின் இந்த மாடலை அமேசான்சேல் (அல்லது) பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம். இதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். ஐபோன் 14 (128GB) அமேசானில் அறிமுக விலையான ரூபாய்.79,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை வாங்கும் போது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தினால், உடனே ரூபாய்.1,250 தள்ளுபடி கிடைக்கும். பழைய போனுக்குப் பதில் இந்த போனை வாங்கி பரிமாற்ற சலுகையை பயன்படுத்திக் கொண்டால், வாடிக்கையாளர்கள் ரூபாய்.15,200 வரை சேமிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப்பலனும் கிடைத்தால், ஐபோன் 14ன் விலை உங்களுக்கு ரூபாய்.63,450 ஆக குறந்து விடும். பிளிப்கார்டில் இருந்து ஐபோன் 14-ஐ வாங்கினால், அமேசானில் கிடைப்பதைவிட அதிக சலுகைகளை பெறலாம். அமேசானைப் போன்றே பிளிப்கார்டிலும் ஐபோன் 14 ரூபாய். 79,900 என்ற விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் அமேசானைவிட வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளின் மதிப்பு இங்கு சிறப்பாக இருக்கிறது.
பிளிப்கார்டில் இருந்து ஐபோன் 14-ஐ வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கி (அல்லது) ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அத்துடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப்பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், மொத்தமாக ரூபாய்.19,900 சேமிக்க முடியும். இவ்வழியில் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்டில் ஐபோன் 14 ஐ 58,500 ரூபாய்க்கு வாங்க இயலும். ஐபோன் 14ன் அடிப்படை சேமிப்பக மாறுபாடு அதாவது, 128 ஜிபி மாறுபாடு பற்றி தெரிந்துகொள்வோம். A15 பயோனிக் சிப்பில் வேலைசெய்யும் இந்த ஸ்மார்ட் போனில், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே மற்றும் 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த போன் 12-12MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12MP முன் கேமராவை கொண்டுஇருக்கிறது. ஐபோன் 14ல் ஆடியோ ஜாக் இல்லை மற்றும் விரைவான சார்ஜிங் (ஃபாஸ்ட் சார்சிங்) வசதியும் வழங்கப்படவில்லை. சார்ஜ்செய்ய, இந்த போன் USB Type-C போர்ட் மற்றும் லைட்னிங் கேபிளுடன் வருகிறது.