Categories
மாநில செய்திகள்

தொடங்கியது திமுக-வின் சரிவு!…. இதுல இருந்து மீள முடியாது!…. பா.ஜ.க மூத்த தலைவர் அதிரடி பேச்சு….!!!

தி.மு.க-வின் சரிவு துவங்கி விட்டதால் அந்த கட்சி இவற்றிலிருந்து மீளமுடியாதென பா.ஜ.க மூத்ததலைவர் சிபி ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை அனைவ்ரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் இதுதான் திமுக-வினருக்கான சரிவின் தொடக்கம் ஆகும். இந்த சரிவிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளமுடியாது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜக-வின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரை பா.ஜ.க மூத்ததலைவர் சிபி ராதா கிருஷ்ணன் பார்த்துவிட்டு சிறைச்சாலை முன்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு பேசினார்.

மாநில அரசு பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜ.க-வினுடைய கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தமன் பாலாஜி அவர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு அரசே சட்டத்தை தவறாக பயன்படுத்துகிற போக்கு என்பது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிவிடும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |