குஜராத் மாநிலம் மோர்பியில் சென்ற அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்த 135 நபர்களில் 55 பேர் குழந்தைகள் என இப்போது தெரியவந்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி இவற்றில் 18 மாத பச்சிளம் குழந்தைகளில் இருந்து 17 வயதுடைய சிறார்கள் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளை தவிர்த்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 ஆண்களும், 35 பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.