தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, உரையாற்றினார்.
மருத்துவக் கல்லூரிகள் திறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்தேன். தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்துள்ளேன்.
கடந்த 2014ஆம் ஆண்டில் மருத்துவக் 82,000 ஆக இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் தற்போது 22 ஆக உயர்ந்துள்ளதது. பாஜக ஆட்சிக்கு வரும்போது 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ஆனால் தற்போது 597 ஆக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.