தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று தை கடைசியை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், தயிர், திருநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து சித்தர் முத்துவடுகநாதருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சித்தர் முத்துவடுகநாதரை தரிசனம் செய்துள்ளனர்.