Categories
உலக செய்திகள்

தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சி…. படையெடுக்கப் போகின்றதா பிரபல நாடு….?

சீனாவில் கடந்த 1949 இல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பின் தைவான்  தனி நாடாக உருவாகியுள்ளது. ஆனாலும் தைவான்  தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜிம் ஜம்பிங் தலைமையிலான சீன அரசு தெரிவித்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படைபலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகின்றது. மேலும் தைவான்  எல்லைக்குள் அவ்வபோது சீனா  போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே நேரம் தீவு நாடாக தைவானுக்கு அமெரிக்க அதிரவளித்து வருகின்றது.

தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகின்றது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி அரசு முறை பயணமாக கடந்த 2 ம் தேதி இரவு தைவானுக்கு சென்றுள்ளார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசி உள்ளார். நான்சியின் இந்த பயணம் சீனாவிற்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தைவான் பயணத்தை முடித்துக் கொண்டு நான்சி கடந்த புதன்கிழமை ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். நான்சி தைவானை விட்டு புறப்பட்டு சென்ற உடனே சீனா மிகப்பெரிய போர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறது தீவு நாடான தைவானை சுற்றி வளைத்த சீன போர்க்கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் ஏவுகணைகள் தைவான் கடற்பரப்பின் எல்லைக்குள் விழுந்திருக்கின்றது. மேலும் சில சீன  ஏவுகணைகள் ஜப்பானின் கடற்பகுதியில் விழுந்திருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கின்றது. சின  போர் விமானங்களும் தைவான் எல்லைக்குள் நுழைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. சீன ராணுவ வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படைகளையும் சீனா  களமிறக்கி இருக்கிறது. இந்த போர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சீனாவின் போர் பயிற்சி ஜப்பான் மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு பதற்றத்தை அதிகரித்து இருக்கின்றது. அதே நேரம் தைவான் மீது சீனா படையெடுக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் முப்படைகளும் தைவான்  மீது படையெடுத்து அந்த நாட்டை கைப்பற்றும் சூழலை ஏற்பட்டிருப்பதால் தென் சீன கடற்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Categories

Tech |