தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதே முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நிவர் புயல் ஏற்பட்டபோது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
எதிர் கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பராக பார்த்தவர், முதல்வரானதும் எப்படி பார்க்கிறார் என்பது தெரியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிற்கு பாதிப்புகள் சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பித்த பிறகுதான் அந்த குழு தமிழகம் வரும். ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் தமிழக அரசின் என் மீது வழக்கு தொடரட்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.