Categories
சினிமா

தேவி ஸ்ரீ பிரசாத்துடன் திருமணமா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை….!!!!!

தமிழில் “செவன்” திரைப்படத்தில் நடித்த பூஜிதாபொன்னடா, இப்போது “பகவான்” என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதில் தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், முன்பே சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை பூஜிதா பொன்னடாவை மணந்துள்ளதாக தகவல் பரவிவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பூஜிதா பொன்னடா அளித்துள்ள விளக்கத்தில், “நான் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. இது போன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகிறது என புரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை, சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர்” என்று கூறினார்.

Categories

Tech |