எகிப்து தலைநகர் கெய்ராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிறு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான சரியான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.இருந்தாலும் தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. 41 பேர் உடல் கருகி பலி…. 45 பேர் படுகாயம்….. அதிர்ச்சி….!!!!
