தென்கொரியாவில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் Sarang jeli தேவாலய உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் தென்கொரியாவில் இதேபோன்ற ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்கு பங்கேற்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களால் 5,200 பேருக்கு கொரோனா பரவியது. இன்று வெளியாகியுள்ள தகவலில், புதிதாக 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,515 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் sarang jeil தேவாலயத்தில் உடன் தொடர்புடைய மேலும் 118 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்தில் ஆராதனையில் பங்கேற்ற 4000 பேர்களில் 3,400 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த தேவாலயத்தின் முக்கிய போதகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தேவாலயத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2,00,000 மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.