வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார்.
இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் போது இந்த கவசம் அணிவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா 30-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் பூஜையின் போது அதிமுக பொறுப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பார். ஆனால் இந்த ஆண்டு தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ், இபிஎஸ் என தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இதனால் தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர்.