Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவர் சிலை அகற்றம்…. அதிமுக ஆல் அவுட் ஆகும்…. கருணாஸ் ஆவேசம்….!!

மதுரையில் தேவர் சிலையை அகற்றியதை தொடர்ந்து கருணாஸ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் எனக் கூறியுள்ளார் .

மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி ஊர் மக்கள் அனைவரும் அங்கு தேவர் சிலையை வைத்துள்ளார்கள். இதனால் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் . அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதால் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் .

இச்சம்பவத்தினை அறிந்து வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசை ஊர் எல்லையிலேயே வைத்து காவலர்கள் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கருணாஸ் காவலர்களிடம் , “மற்ற கட்சித் தலைவர்களை ஊருக்குள் அனுமதிக்கும் போது ,என்னை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் ” என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஊருக்குள் சென்ற கருணாஸ் பொதுமக்களை சந்தித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தாலும் அதனை பொது மக்களுடன் கலந்து பேசி முறையாக அகற்றியிருக்கலாம். ஆனால் காவலர்கள் ஜேசிபி மூலம் அகற்றியது கண்டனத்திற்குரியது. அதோடு மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் கிராம மக்கள் மீது பொய் வழக்கு மேற்கொண்டு மக்களை அச்சுறுத்துகின்றனர். இவ்வாறு முக்குலத்திற்கு எதிராக செயல்படும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆல் அவுட் ஆகும் என்று கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |