Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர் மீது அமர்ந்திருந்த கேங்மேன்…. திடீரென பாய்ந்த மின்சாரம்…. பக்தர்களிடையே பரபரப்பு….!!

கோவில் தேர் மீது அமர்ந்து இருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி இ.பி. காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி சித்திரை திருவிழா பூச்சாற்றுதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சாமி தேரில் வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். இவர்களுடன் மின்வாரிய ஊழியர் கேங்மேன் குமரேசன் என்பவரும் தேரில் அமர்ந்து மின்சார வயர்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமரேசன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அனைத்து, படுகாயமடைந்த குமரேசனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  இதற்கிடையே மின்சாரத்தை அணைத்து இருந்த நிலையில் எப்படி அப்பகுதியில் மின்விநியோகம் வந்தது என மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |