Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அண்ணா பல்கலை

தொழில்நுட்ப பிரச்சினையால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுறை நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து நேற்று ஆன்லைன் தேர்வு தொடங்கியது.

மாநிலம் முழுவதும் 90% மாணவர்கள் ஆன்லைனில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வை தொழில்நுட்ப சிக்கலின்றி எழுதியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு இன்டர்நெட் சிக்கல் போன்றவற்றால் ஒரு சில மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |