தேர்வு எழுதி கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் நியூ காலனியில் போலீஸ்காரரான காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அனிதா நேற்று தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அனிதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அனிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.