டெல்லியில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் டெல்லியில் KGமுதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி அளிக்க மாநில அரசு புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு அசைன்மென்ட்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.