புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கும்பகோணம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் நடக்கவிருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.