Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்பிரியன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராஜ்பிரியன் 3 பாடத்தில் தேர்ச்சி அடையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜ்பிரியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |