Categories
தேசிய செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு….! தேர்வு தேதி திடீர் மாற்றம்…. மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பி.யூ.சி தேர்வு கால அட்டவணையானது மாற்றம் செய்து வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பி.யூ.சி.   தேர்வு நடத்தப்படவில்லை. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பி.யூ.சி தேர்வுக்கான கால அட்டவணைகளும் திடீரென மாற்றம் செய்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வானது வருகின்ற ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும் இது குறித்து கர்நாடக அரசின் பள்ளிக்கல்வித்துறை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கர்நாடகத்தில் பி.யூ.சி படிப்பிற்கான இறுதியாண்டு தேர்வு வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி மே மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி ஆகிய படிப்புகளில் சேருவதற்காக மத்திய அரசு நடத்துகின்ற ஜே.இ.இ தேர்வு வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தேர்வும் ஒரே நேரத்தில் வருவதால் மாணவர்களின் நலன் கருதி, பி.யூ.சி தேர்வின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் பி.யூ.சி தேர்வானது ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து இது ஒரு தற்காலிக கால அட்டவணை தான் என்று கூறிய பள்ளி கல்வித்துறை, இந்த கால அட்டவணையில் யாருக்காவது ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் அதைக்குறித்து வருகின்ற 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |