தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவைச் செயலாளர், அதிகாரிகளுக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரை முடிந்த பிறகு அவை ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் ? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.