தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யக் கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் பவன் திவான் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவோ, பதவி உயர்த்தவோ கூடாது என்று அறிவித்திருந்தார். நேற்று அசாமில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பதவி மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.