காஞ்சிபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சானிடைசர் வழங்க தி.மு.க கட்சியை சேர்ந்த பெண்களை பணியில் ஈடுபடுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்தது. அதாவது வாக்களிக்க வரும் மக்கள் முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றது. மேலும் தனிமனித இடைவெளி மற்றும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்துதல் போன்றவற்றை கொண்டு வந்தது.
இதனால் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்க ஆட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் வாக்குச்சாவடியில் பொதுமக்களுக்கு உபகரணங்கள் வழங்க தி.மு.க கட்சியை சேர்ந்த பெண்களை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அ.தி.மு.க நிர்வாகி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றியுள்ளார்.