தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக உரிய ஆவணமின்றி கொண்டு வரும் 1 லட்ச ரூபாய்க்கு மேலிருக்கும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி பகுதியில் பறக்கும் படை அலுவலர் மற்றும் பேரூராட்சி தேர்தல் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையிலும், செஞ்சியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.