தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பண வீக்கம் போன்றவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குறை கூறி இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவரது ஆட்சி கவிழும் என நம்பப்படுகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக கூறி பிரதமர் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ரூபாய் 50 அபராதம் விதித்திருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கடந்த 16ம் தேதி அங்குள்ள ஸ்வாட் நகரில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மந்திரிகள் 5 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.