தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு சாலைக் கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை இருந்தாலே, மரணங்களுக்கு முழு இழப்பீட்டுத்தொகை தரப்படும். சென்னை மெட்ரோவுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. குமரி வரை தொழில் வழித்தடம். 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு. பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மும்பை – கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க முடிவு. நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் விரைவில் மெட்ரோ ரயில் சேவை. தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு சாலைக் கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.1.08 கோடி மதிப்புள்ள சாலை கட்டுமானத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு.
ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு. அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 11,000 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்படும். சாலைத் திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும். மதுரை – கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் எனவும் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.