இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்ட மியா ஜார்ஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவரை இந்திய தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலில் கோட்டயம் தொகுதியின் தேர்தல் தூதராக நியமித்துள்ளது. இந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது.
இதுகுறித்து மியா கூறுகையில், “இந்த பொறுப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளைஞர்களை, குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிகப்படியாக ஓட்டளிக்க ஊக்குவிப்பேன். ஓட்டு போடுவதை தவிர்த்து வேறு எந்தவிதமான தேர்தல் செயல்முறைகளில் ஒருபோதும் தலையிடமாட்டேன் ” என்று கூறியுள்ளார் மியா.