Categories
தேசிய செய்திகள்

தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய மற்றும் முந்தைய கொண்டாட்டங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போதும் வெற்றிக்குப் பிறகும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |