மக்களிடம் சென்று கருத்து கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் புது முயற்சியை தமிழக பாஜக கையெலெடுத்துள்ளது எதிர்கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் வெளியாகும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர்கள் அத்தனை பேருமே வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
20தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பானது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நான் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக இந்த முறை இரட்டை இலக்கில் சட்டசபையில் உட்காரும் என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அது நிச்சயமாக நடக்க போகிறது. நாங்க எல்லாருமே ரொம்ப துடிப்போட எதிரிகளை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
21ஆம் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். எங்களின் தேர்தல் அறிக்கை மக்களுடைய குரலாக இருக்கும்.18ஆம் தேதி நான் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் பிரசார கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார். எங்களுடைய தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கை. நாங்கள் மக்களிடம் கருத்து கேட்கின்றோம். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை மக்கள் இடத்தில் நேரடியாக சென்று கருத்து கேட்கிறோம். நாங்களாக எந்த தேர்தல் அறிக்கையும் தயார் செய்யல என எல்.முருகன் தெரிவித்தார்.