சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மஹால் ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் 210 மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்டம் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியுள்ளார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய் துறையினர், உலக சாதனை நிறுவனத்தை சேர்ந்த நீலமேகம், அரசு அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.