காஞ்சிபுரத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைந்துள்ளது . அந்தக் கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்கள் சிலர் அவர்களது பையை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.அங்கிருந்த காய்கறி கடை உரிமையாளர் சிறிது நேரம் கழித்து பையிடம் எவரும் இல்லாத காரணத்தினால் பையை எடுத்து திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரி வெளியே தெரியும் அளவிற்கு வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த டப்பாவினை காய்கறி கடை உரிமையாளர் கால்வாயில் வீசியுள்ளார் . இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவலர்கள் கால்வாயில் இருந்த வெடிகுண்டை மீட்டு மாவட்ட சூப்பிரண்ட் போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக வைத்துள்ளனர். இதற்கிடையே சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்தால் தான் இது என்னவென்று தெரியும் என்று காவலர்கள் கூறியுள்ளார்கள் . இச்சம்பவம் தேர்தலை நிறுத்த எவரேனும் செய்த சதியா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.