Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு முன்பே சிறை…! திமுகவினர் ஷாக்… அமைச்சர் எச்சரிக்கை …!!

ஊழல் என்ற வார்த்தையை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசினால் நல்லது என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர் என்றும், ஊழலுக்காக தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் விருது வாங்கி அவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்தார். 2G வழக்கு இன்னும் முடியவில்லை எனவும்,  தேர்தலுக்கு முன்பாகவே திமுகவினர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்படும் எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Image result for kadambur raju

மேலும், அயல்நாட்டுகாரர்கள் வியந்து போகின்ற அளவுக்கு ஊழல் செய்தவர்கள் திமுகவினர். 2G வழக்கில் இடைக்காலத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்துள்ளது. ஊழல் ஊழல் என்று சொன்னாலே மக்களுடைய நினைவில் வருவது திமுக தான். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் இந்த வார்த்தையை மறந்துவிட்டு அல்ல விட்டு விட்டு வேற எதாவது பேசினாலும் அவருக்கு நல்லது என அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |