நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3வது தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு 3 வது நாளான இன்று நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தலமையில் விசாரணைக்கு வந்தது.அதில் ஆஜராகிய தேர்தல் ஆணையம் சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் செய்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் உள்ள வழகுக்காக காத்திருக்கிறோம். சுகாதார துறைகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.