Categories
உலக செய்திகள்

தேர்தலுக்குள் தயாராகும் தடுப்பூசி… அதிபர் டிரம்ப்…!!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டாள், அது தனக்கு அதிக அளவு ஓட்டு எண்ணிக்கையை அள்ளிக் கொடுக்கும் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்புகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா கண்டறிந்துள்ள தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் மூன்றாம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ” இந்த தடுப்பூசி, மற்றொரு குழு தடுப்பூசிகளுடன் இணைகின்றது. அவை முடிவுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. யாரும் சாத்தியமில்லை என்று நினைத்த விஷயங்களைத்தான் நாம் தற்போது செய்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் செயல்முறைகளை நாம் சில மாதங்களில் செய்துள்ளோம்.

அமெரிக்காவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்க கூடிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கக்கூடிய மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே கூட அவசரகால பயன்பாட்டை அனுமதிக்க தயாராக உள்ளோம் என்று கூறியிருந்தார். இது ஒரு அரசியல் முடிவு அல்ல. அறிவியல், மருந்து மற்றும் தரவு அடிப்படையிலான முடிவுதான். எனவே அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் ஆச்சரியம் கொள்வதற்கு எதுவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |