Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பைக் குறைத்து காட்டவில்லை… அமைச்சர் திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் தேர்தல் காரணமாக தொற்று பாதிப்பு குறைத்து  காட்டவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று 3 வது அலை பரவத்  தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு ஜனவரியில்  உச்சத்தை தொட்டது. ஆனால்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அருகம்பாக்கத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்காக பாதிப்பு  எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை எனவும்  அப்படி காட்டவும் முடியாது என்றும் கூறினார். மேலும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் வேண்டும். இதுவரை தமிழகத்தில் 92 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  ஆனால் அவர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானனோர்  இரண்டாம் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |