பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் ஜேபி. நாட்டாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.
அங்கு ஜேபி நாட்டா திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவரை பாஜக தொண்டர்கள் மலர்தூவி மற்றும் பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வரவேற்பு கோலாகலமாக நடந்தது. மேலும் பிரதமர் மோடி தொண்டர்களை நோக்கி வெற்றி அடையாளத்தை காட்டினார்.